நியாயவிலை கடை ஊழியர்களின் அடாவடி பொதுமக்கள் வேதனை
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
கொரோனா பரவாமல் தடுப்பதற்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தினக் கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுகிறது. அதனுடன், ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பாமாயில் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிவாரண நிதி மற்றும் விலையில்லா பொருட்களை வாங்குவதற்கு ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, டோக்கன் விநியோகிக்கப்பட்டு, நாளொன்றுக்கு ஒரு ரேஷன் கடையில் 100 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் ஏப்ரல் 7ம் தேதி முதல் இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது இந்தநிலையில் ஆவடி காமராஜர் நகர் I கடை எண்:EB071நியாய விலைகடையில் இன்று மக்களுக்கு கொடுக்கும் இலவச பொருட்களை நியாயவிலை கடை ஊழியர்கள் இலவச பொருட்களை வாங்க வந்த மக்களிடம் குறைந்தபட்சம் 35 ரூபாய்க்கு ரேஷன் பொருள் எதையேனும் வாங்கினால் மட்டுமே அரசின் இலவச பொருட்கள் உங்களுக்கு கிடைக்கும் என்று கட்டாயப்படுத்தி மக்களிடம் 35 ரூபாய்க்கு ரேஷன் பொருட்கள் வாங்கிய பின்பே அவர்களுக்கு அரசு அறிவித்த இலவச ரேஷன் பொருட்களை கொடுக்கச்செய்தனர் இதனால் பொதுமக்கள் பலரும் நியாயவிலை கடை ஊழியர்களின் இந்த செயலை கண்டு மிகவும் வேதனை அடைந்தனர். மேலும் இதுபோன்ற நியாயவிலை கடை ஊழியர்களின் அடாவடிதனத்தை அதன் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொண்டு இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.